ஆந்திர மாநிலத்தில் பாதிரியார் ஒருவர் நடத்தி வரும் குழந்தைகளுக்கான விடுதியில் பிரியாணி, சமோசா சாப்பிட்ட 35 மாணவ மாணவிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதே சிகிச்சை பலனின்றி இரண்டு மாணவிகள் உயிரிழந்ததாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர் மாணவ மாணவிகள் தங்கி படிக்கும் விடுதி நடத்தி வரும் நிலையில் இதில் சுமார் 100 மாணவ மாணவிகள் தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒருவர் தனது வீட்டு நிகழ்ச்சியில் மீதமான பிரியாணி மற்றும் சமோசாக்களை விடுதியில் தங்கி இந்த மாணவ மாணவிகளுக்கு கொடுத்த நிலையில் அதை சாப்பிட்ட குழந்தைகளில் சிலருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
35 மாணவ மாணவிகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலனின்றி இரண்டு மாணவிகள் உயிரிழந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து போலீசார் பாதிரியார் கிரன் குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் உணவு கொடுத்த நபரிடமும் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அனுமதி இல்லாமல் நடத்தப்படும் அனாதை இல்லங்கள் ஆதரவற்ற இல்லங்கள் அனைத்தும் மூடப்படும் என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் இறந்த மாணவி மாணவிகளின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.