சபரிமலையில் 30 நாளில் 19.38 லட்சம் பக்தர்கள் தரிசனம்!!

சனி, 17 டிசம்பர் 2022 (08:51 IST)
கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் சபரிமலையில் கோயிலில் 30 நாட்களில் 19.38 லட்சம் பக்தர்கள் தரிசனம்.


சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைகளுக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அலைமோதுகிறது. கார்த்திகை மாதத்தில் ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருந்து, இருமுடி கட்டி பலரும் வந்து செல்கின்றனர்.

பல நடவடிக்கைகள் எடுத்தும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தினசரி பக்தர்களின் எண்ணிக்கையை 90,000 ஆக குறைக்கவும் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி முதல் பாதியில் அதிகாலை 3 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், இரண்டாவது பாதியில் மாலை 3 மணி முதல் இரவு 11.30 மணி வரையிலும் தரிசன நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. இருப்பினும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் குழந்தைகள் முதியவர்களுக்கு சிறப்பு லைன் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் சபரிமலையில் கோயிலில் 30 நாட்களில் 19.38 லட்சம் பக்தர்கள் வந்த ஐயப்பனை தரித்துள்ளனர். சுமார் 21.71 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர் என்பது கூடுதல் தகவல்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்