சபரிமலை பக்தர்களுக்கு புதிய வசதி: தேவஸ்தானம் ஏற்பாடு!
வியாழன், 15 டிசம்பர் 2022 (12:05 IST)
சபரிமலையில் இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து தேவஸ்தானம் அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
அந்த வகையில் சபரிமலையில் தற்போது குழந்தைகள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்பாடு செய்துள்ளது.
சபரிமலைக்கு தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவதை அடுத்து பக்தர்கள் அதிக நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிக நேரம் வரிசையில் காத்திருப்பதால் அவர்களது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு என தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது
இதனை அடுத்து குழந்தைகள் மற்றும் முதியவர்கள் விரைவில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது