கடத்தப்பட்ட 18 மாத குழந்தைக்கு கொரோனா: மீட்ட போலீசாருக்கு அதிர்ச்சி

ஞாயிறு, 17 மே 2020 (08:20 IST)
ஹைதராபாத்தில் 18 மாத குழந்தை கடத்தப்பட்ட நிலையில் அந்த குழந்தையை அதிரடியாக ஒருசில மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். ஆனால் குழந்தையை மீட்ட போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அந்த 18 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது 
 
ஐதராபாத்தில் சாலையோரம் வசிக்கும் 22 வயது பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை காணவில்லை என போலீசில் புகார் அளித்தார். இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அந்த பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது 25 வயதான ஒருவர் குழந்தையிடம் பழங்கள் கொடுத்து தனது இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது 
 
இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த இரு சக்கர வாகனத்தில் நம்பரை வைத்து அந்த நபரை கண்டுபிடித்தனர். தனக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டதால் குழந்தையை வளர்க்க வேண்டும் என்பதற்காக கடத்தியதாக அந்த நபர் வாக்குமூலம் அளித்தார் 
 
இதனை அந்த குழந்தையை தாயிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அதற்கு முன்னால் அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இந்த நிலையில் அந்த 18 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து குழந்தையை கடத்திய நபர், அவரது குடும்பத்தினர், குழந்தையை மீட்ட மீட்ட போலீசார் அவர்களின் குடும்பத்தினர் என 22 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்