பிரசவ வார்டில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 11 கர்ப்பிணிகள் 2 குழந்தைகள் பலி

புதன், 13 மே 2020 (07:07 IST)
பிரசவ வார்டில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு
கொரோனா வைரஸ் பரபரப்பாக இருக்கும் இந்த காலத்திலும் தீவிரவாதிகள் தங்கள் அட்டகாசத்தை குறைத்துக் கொண்டதாக தெரியவில்லை. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவ வார்டில் திடீரென நுழைந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதால் 11 கர்ப்பிணிகளும் இரண்டு பச்சிளம் குழந்தைகளும் மற்றும் செவிலியர்கள் சிலரும் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் அரசு மருத்துவமனையில் சுமார் 100 பெண்கள் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென நேற்று இரவு போலீஸ் உடையில் நுழைந்த பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனை அடுத்து அந்த மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்த 11 தாய்மார்களும், இரண்டு பச்சிளங்குழந்தைகளும் கொல்லப்பட்டதாக ஆப்கன் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
 
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பதும், இந்த தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் குறித்த தகவல் அறிந்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மிட்புப்படையினர் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிகளை வேறு இடத்திற்கு மாற்றினர். இந்த தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்