ராட்சத கிரேன் விழுந்து விபத்து...17 பேர் உயிரிழப்பு- எடப்பாடி பழனிசாமி இரங்கல்

செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (15:06 IST)
மகராஷ்டிர  மாநிலம் தானேவில் ராட்சத கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா( எதிர்ப்பு அணி) பாஜக  கூட்டணி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில்  அங்குள்ள தானேயின் ஷாஹபூரில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில்  நேற்றிரவு ஒரு ராட்சத கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 17 தொழிலாளார்கள் உடல் நசுங்கி பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்த விபத்து பற்றி முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’மகாராஷ்டிரா மாநிலத்தில் தானேவின் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் பாலம் கட்டும் பணியின் போது ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் நடந்த விபத்தில்
17பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும் , வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்,

அதில் இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன், விபத்தில் இறந்த தமிழ்நாட்டை சேர்ந்த இருவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசை வலியுறுத்துவதுடன் ,

விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்பவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்