கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை..! கேரளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!!

Senthil Velan

செவ்வாய், 30 ஜனவரி 2024 (12:42 IST)
கேரளாவில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
கேரள மாநிலம் ஆலப்புழாவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில நிர்வாகி ஷான் என்பவர் கடந்த 2021 டிசம்பர் மாதம் 18-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். ஷான் கொலை நடந்த சில மணி நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி ரஞ்சித் சீனிவாசன் என்பவரும் வெட்டி கொல்லப்பட்டார்.
 
கொலை செய்யப்பட்ட ரஞ்சித்,  சீனிவாசன், பாஜக கேரள கமிட்டி உறுப்பினராகவும், ஓபிசி மோர்ச்சா (மாநில) செயலாளராகவும் இருந்தார். ஆலப்புழாவில் அடுத்தடுத்து நடந்த அரசியல் படுகொலைகள் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கேரளாவின் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம், இந்த வழக்கில் தொடர்புடைய தீவிர இஸ்லாமிய அமைப்பான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா உறுப்பினர்கள் 15 பேர் குற்றவாளிகள் என்று ஜனவரி 20ஆம் தேதி தீர்ப்பளித்தது.
 
இந்நிலையில் குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி குற்றவாளிகள் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கேரளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ALSO READ: இந்து அல்லாதவர்களுக்கு பழனி கோவிலில் அனுமதி இல்லை.! மதுரை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு.!!
 
கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்