மேம்பாலத்தில் இருந்து லாரி கவிழ்ந்த விபத்தில் 15 பேர் பரிதாப பலி

புதன், 18 ஏப்ரல் 2018 (09:36 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் மேம்பாலத்தில் இருந்து லாரி கவிழ்ந்ததில் 15 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாரிகளில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கும் போதிலும், மக்கள் பலர் சட்டத்தை மதிக்காமல் லாரிகளில் அபாயகரமான பயணம் மேற்கொள்கின்றனர். அப்படி பயணம் செய்யும் போது விபத்து ஏற்பட்டு, சிலர் பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.
 
மத்திய பிரதேச மாநிலம் சிதி மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 30 பேர் அடங்கிய கும்பல், லாரியில் சென்று கொண்டிருந்தனர். லாரி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுப்படுகையில் பாய்ந்தது. 
 
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதனையடுத்து இதற்கு இரங்கல் தெரிவித்த மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்