டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ விசாரணைக்கு அழைத்துள்ள நிலையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. எதிர்கட்சிகளை சிறப்பு பிரிவின் மூலம் உளவு பார்த்ததாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீது எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்த சமீபத்தில் சிபிஐக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. அதுமட்டுமின்றி டெல்லி மதுபான பார்களுக்கு உரிமம் வழங்கிய வழக்கில் ஏற்கனவே மணி சிசோடியா சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று மணி சிசோடியா சிபிஐ அலுவலகத்திற்கு ஆஜராக இருப்பதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன
டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.