உபியில் 108 அடியில் அனுமன் சிலை: கட்டுமான பணிகள் தீவிரம்!

வியாழன், 14 ஜூலை 2022 (17:54 IST)
உபியில் 108 அடியில் அனுமன் சிலை: கட்டுமான பணிகள் தீவிரம்!
 குஜராத் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பிரம்மாண்டமான அனுமன் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில் தற்போது அதே போன்று அனுமன் சிலை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிறுவும் பணி நடைபெற்று வருகிறது
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜூலேலால் என்ற பூங்காவில் 108 அடி அனுமன் சிலை தயாராகி வருகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த 108 அடி அனுமன் சிலை தயாராகி விடும் என்றும் கூறப்படுகிறது.
 
மேலும் தியான மண்டபம், பஜனை மண்டபம் உள்பட பல்வேறு வசதிகள் இந்த அனுமன் சிலை அருகே கட்டப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 108 அடியில் பிரம்மாண்டமாக அனுமன் சிலையின் பணிகள் நடைபெற்று வரும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்