ஐதராபாத்தில் பொறியியல் மாணவன் ஒருவர் குடிபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி எதிரே வந்த கார் மீது மோதியதில் ரம்யா என்னும் சிறுமி கோமா நிலைக்கு சென்று, பின்னர் சனிக்கிழமை இரவு பரிதாபமாக இறந்தார்.
ஐதராபாத்தில் பத்து வயது சிறுமி பள்ளியில் சேர்ந்த முதல் நாள் வகுப்பு முடிந்ததும், காரில் உறவினர்களுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். முதல் நாள் பள்ளி அனுபவத்தை மகிழ்ச்சியுடன் கூறிக்கொண்டிருந்தார் ரம்யா. அவர் சொன்று கொண்டிருந்த காரை எதிரே வந்த கார் ஒன்று அசுர வேகத்தில் வந்து மோதியது. இதில் சம்பவ இடத்தில் ரம்யாவின் உறவினர் ஒருவர் பலியானார்.
படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ரம்யா கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், எந்த நேரத்திலும் உயிரிழக்கலாம் என மருத்துவர்கள் கூறினர். இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ரம்யா சனிக்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து குடிபோதையில், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும் காரை ஓட்டி சிறுமி உட்பட இரண்டு பேரின் உயிர் போக காரணமான அந்த பொறியியல் மாணவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர் காவல் துறையினர்.