ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் ஒரு மாதத்தில் மட்டுமே 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்துள்ளன
ராஜஸ்தான் மாநிலத்தின் பண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் மட்டுமே 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்துள்ளன. குழந்தைகள் உயிரிழந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
இது குறித்து மருத்துவமனையில் பணிபுரியும் ஹிடேஷ் ஷோனி, “ஏற்கனவே தீவிர நோய் பாதிப்பினால் இருந்த குழந்தைகள் உயிரிழந்தன, அது போல் சுவாசத்தில் கோளாறு உள்ள குழந்தைகளும் உயிரிழந்தன. இது போல் பல்வேறு காரணங்களால் குழந்தைகள் உயிரிழந்தன. ஆனால் இந்த உயிரிழப்புகளுக்கு மருத்துவமனையின் பொறுப்பற்ற தன்மை காரணம் அல்ல” என கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் உள்ள மருத்துவமனையில் 100 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.