1 கோடி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி

புதன், 5 ஜனவரி 2022 (14:28 IST)
மூன்று நாட்களில் நாடு முழுவதும் ஒரு கோடி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. 

 
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து சிறுவர்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர். 

அதன்படி பிரதமர் மோடி சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்திருந்தார். மேலும் கோவின் இணையதளத்தில் இதற்கான முன்பதிவுகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தடுக்க 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. தற்போது 15 முதல் 18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி செலுத்தும் பணியை மும்முறமாக செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களில் நாடு முழுவதும் ஒரு கோடி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்