சார்லி சாப்ளின் 2 திரைவிமர்சனம்.!

வெள்ளி, 25 ஜனவரி 2019 (16:53 IST)
சார்லி சாப்ளின் படத்தைத் தொடர்ந்து, ‘சார்லி சாப்ளின் 2’ என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் ஷக்தி சிதம்பரம். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில்  90’ஸ் கிட்ஸ் பேவரட் நடிகர்களான பிரபுதேவா, பிரபு நடித்துள்ளனர். மேலும் நிக்கி கல்ராணி, அதா ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் இன்று வெளியாகி திரையங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது படத்தின் விமர்சனத்தை காணலாம். 
 
படம்:- சார்லி சாப்ளின் 2 
இயக்குனர்:- ஷக்தி சிதம்பரம் 
நடிகர்கள் : – பிரபு தேவா, நிக்கி கல்ராணி, பிரபு, அதா ஷர்மா, அமித் பார்கவ் பிரபு
தயாரிப்பு :- அம்மா கிரியேஷன்ஸ் 
இசையமைப்பளார் :- அம்ரீஷ் கணேஷ் 
படம் வெளியான தேதி : 25-01-2019
 
கதைக்கரு:-
 
மேட்ரி மோனி வைத்து நடத்துபவரானபிரபுதேவா ஊருக்கே திருமணம் செய்துவைக்கிறார் ஆனால் இவருக்கு திருமணம் நடக்கவில்லை.  பிறகு எப்படி காதலி நிக்கி கல்ராணியை மணக்கிறார் என்பதே கதை.  
 
கதைக்களம்:-
 
பிரபுவின் மகளான நிக்கி கல்ராணியை சந்தித்து காதலில் விழுகிறார் பிரபுதேவா. ஒழுங்காக செல்லும் காதலில் அதா ஷர்மாவால் பிரச்சனை ஏற்படுகிறது. பிரபு தேவா தவறு செய்யவில்லை என்பதை அறியாத நிக்கி கல்ராணி அவரை அடிக்கடி சந்தேகபட்டுக்கொண்டே இருக்கிறார்.
 
பிறகு சண்டைகள் ஓய்வு அடைய இறுதியில் எப்படியோ நிக்கி கல்ராணிக்கும் பிரபுதேவாவுக்கு  திருப்பதியில் திருமணம் நடக்க இருக்கிறது, அதற்காக பிரபுதேவா குடும்பமும், நிக்கி கல்ராணி குடும்பமும் திருப்பதிக்கு போகின்றனர். அங்கு இரு குடும்பங்களுக்குள் நடக்கும் கலகலப்பான தொகுப்பே ‘சார்லி சாப்ளின் 2’. திருப்பதிக்கு போனா திருப்பம் வரும் என்பார்கள். அது என்ன திருப்பம் என்பது தான் இப்படத்தின் சஸ்பென்ஸ். 
 
பிரபுதேவாவுக்கு அவருக்கு காமெடி என்பது கைவந்த கலை போல, அதிலும் ஆள்மாறாட்டம், சமாளிப்பது போன்ற விஷயதில் புகுந்து விளையாடுகின்றார். அத்தனை வித்தைகளையும் இறக்குவதால் அவரின் கதாபாத்திரத்தில் சிக்ஸர் அடித்துள்ளார் பிரபுதேவா .
 
பிரபுதேவா தாண்டி ஆடியன்ஸை சிரிக்க வைப்பது  நண்பர்கள் கேங் தான் அதிலும் துபாய் நண்பர் தான் அநியாயத்துக்கென்று அட்டகாசம் செய்கிறார். பிரபுதேவா பெற்றோராக வரும் டி. சிவா காது கேட்காத தன் மனைவிடம் பேசும் வசனங்கள் தியேட்டரில் கைதட்டல் வாங்குகிறது. 
 
படத்தின் மைனஸ்:-
 
இந்த படத்தில் மிகப்பெரிய மைனஸ் என்னவென்றால் "நம் அனைவருக்கும் தெரிந்த புளித்துப்போன  பழசான ஒரு டெம்ப்ளேட் திரைக்கதை தான் இந்த சார்லீ சாப்ளின், 90களுக்கு ஓகே, அதற்காக 2020 வரப்போகிற நேரத்தில் இன்னும் துளிக்கூட லாஜிக்கே இல்லாத மாதிரி இப்படி ஒரு  திரைக்கதையை வச்சிட்டு அங்கங்கே சிரிக்க வச்சுட்டு போறாங்க. 
 
படத்தின் பிளஸ் :-
 
இருந்தாலும் கமர்சியல் படம் என்பதால் இதில் நீங்கள் அவ்வளவாக கவனிக்கபோவது இல்லை. அதுமட்டுமின்றி படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ப்ளஸஸும் இல்லை. ஒன்று மட்டும் சொல்ல வேண்டும் என்றால் அது பாடல்கள் மட்டும் தான். மேலும், பிரபுதேவாவின் நடனம் வழக்கம் போல அவரின் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட் தான். 
 
இறுதி அலசல்:-
 
பஞ்ச தந்திரம், காதலா காதலா போன்ற படங்களுக்கு நிகராக முழு நீள காமெடி படமாக இதனை நீங்கள் எதிர்பார்த்து போனால் நிச்சயம் உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும் .ஆனால், தியேட்டருக்கு சென்று கொஞ்சம் சிரித்தாள் போதும் என்பவர்களுக்கு இந்த படம் ஒரு முறை பார்க்கலாம் ரகம் தான். 
 
மொத்தத்தில் இந்த படத்திற்கு வெப்துனியாவின் மதிப்பு 5/10. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்