138 இலக்கு கொடுத்தாலும் வெற்றிக்கு போராடும் பாகிஸ்தான்: 4 விக்கெட் விழுந்ததால் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (16:41 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 137 ரன்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 138 என்ற எளிய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வரும் நிலையில் அந்த அணி மிக எளிதில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
ஆனால் முதல் ஓவரிலேயே விக்கெட் இழந்த இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு கட்டுப்படுத்தி வருகிறது. சற்றுமுன் வரை 14 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்னும் 6 ஓவர்களில் 49ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் பாகிஸ்தான் அணி இன்னும் விட்டுக்கொடுக்காமல் வெற்றிக்காகப் போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்னமும் வெற்றிக்கான அதிக வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கு தான் இருக்கிறது என வர்ணனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்