நன்றி கெட்ட ராஷ்மிகா - ரெட் கொடுத்து ஒதுக்கிய திரையுலம்!

வியாழன், 1 டிசம்பர் 2022 (07:52 IST)
நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட படங்களில் நடிக்க கூடாது என கன்னட திரையுலகம் ரெட் கார்ட் கொடுத்து ஒதுக்கியுள்ளது. 
 
இந்திய சினிமாவின் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். அறிமுக படமே அவருக்கு விருதுகள் குவித்தது. 
 
அதை தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் க்ரிக் பார்ட்டி படத்தில் ஹீரோவாக நடித்த ரக்‌ஷித் ஷெட்டியை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர் கீதா கோவிந்தம் ஹிட் அடித்ததால் அவரை கழட்டிவிட்டு விஜயதேவரகொண்டா மீது காதலில் விழுந்தார். 
 
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய திரைப்பயணம் குறித்தும் வெற்றிகளை குறித்து பேசிய ராஷ்மிகா தன்னை வளர்த்துவிட்ட இயக்குனர் ரிஷப் ஷெட்டியையோ ரக்‌ஷித் ஷெட்டியை பற்றியோ எதுமே பேசவில்லை. இதனால் கன்னட திரைப்படங்களில் அவர் நடிக்க கூடாது என ரெட் கார்ட் கொடுத்து ஒதுக்கியுள்ளது அத்திரையுலகம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்