இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். ஆனால் இப்போது அவருக்கு கன்னட சினிமாவில் தடை விதிக்க முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், காந்தாரா பட ஹீரோ ரிஷப்ஷெட்டி சமீபத்திய ஒரு பேட்டியில், ராஷ்மிகா மந்தனா உடன் நடிக்க மாட்டேன் என இலைமறைக்காயாக பேசியுள்ளார்.
ரிஷப் ஷெட்டியின் அடுத்த படத்தில் யார் ஹீரோயின் என செய்தியாளர்கள் கேட்டபோது, என் படத்திற்கு புதிமுக நடிகைகள் தான் பொருத்தமாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார். எனவே முன்னணி நடிகையான ராஷ்மிகா அவரது அடுத்த படத்தில் இடம்பெற போவதில்லை என்று கன்னட சினிமாவில் பேச்சு எழுந்துள்ளது.