தென்னிந்தியாவின் முன்னணி இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்துக்கொண்டிருக்கிறார். தமிழில் இவரது நடிப்பில் நேரடியாக வெளியான ஒரே தமிழ்ப்படம் சுல்தான். இருந்தாலும் அதற்கு முன்னரே அவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவர்கொண்டா இருவரும் திருமணம் செய்வது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால், அது உண்மை இல்லை. அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.