வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை புதிய உச்சம்.. சென்செக்ஸ் 74000ஐ தாண்டியது..!

Siva

திங்கள், 1 ஏப்ரல் 2024 (09:17 IST)
பங்குச்சந்தை  கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சில நிமிடங்களுக்கு முன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 457 புள்ளிகள் உயர்ந்து 74,144  என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தையால் நிப்டி 170 புள்ளிகள் உயர்ந்து 22499 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. வாரத்தின் முதல் நாளே பங்கு சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில் தேர்தல் முடிந்தவுடன் இன்னும் அதிகமாக பங்குச்சந்தை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இன்றைய பங்கு சந்தையில் கரூர் வைசியா வங்கி உள்பட ஒரு சில பங்குகள் மட்டும் குறைந்துள்ளதாகவும் மற்ற அனைத்து பங்குகளும் மிக அதிகமாக உயர்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்