இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 127 புள்ளிகள் உயர்ந்து 72,776 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 52 புள்ளிகள் உயர்ந்து 22,066 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
பங்குச் சந்தை தற்போது ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் தேர்தல் முடிந்த பிறகு பங்கு சந்தை புதிய உச்சம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய பங்குச் சந்தையில் ஏபிசி கேபிடல், சிப்லா, ஐடிசி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் மணப்புரம் கோல்டு, ஐடி பீஸ், கோல்டு பீஸ் ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.