நேற்றைய சரிவுக்கு பின் 500 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. இன்றைய பங்குச்சந்தை நிலவரம்..!

Siva

புதன், 27 மார்ச் 2024 (12:09 IST)
பங்குச்சந்தை நேற்று சரிந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து.
 
கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய உடனே ஏற்றத்தில் தான் இருந்தது 
 
சற்றுமுன் மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 549 புள்ளிகளும் உயர்ந்து 73 ஆயிரத்து 20 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல் தேசிய பங்கு சந்தை பற்றி 162 புள்ளிகளும் உயர்ந்து 22,165 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
இன்றைய பங்குச் சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, கல்யாண் ஜுவல்லர்ஸ், மணப்புரம் கோல்டு ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் கோல்ட் பீஸ், ஐடிசி, கரூர் வைசியா வங்கி ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது 
 
தேர்தல் வரை பங்குச்சந்தை நிதானமான ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் தேர்தலுக்குப் பின் பங்குச்சந்தை உச்சம் அடையும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்