உச்சத்தை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva
வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (12:33 IST)
கடந்த இரண்டு நாட்களாக பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை உயர்ந்திருப்பதை பார்க்கும்போது இந்திய பங்குச்சந்தை உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது. 
 
பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே உயர்ந்து வருகிறது என்பதும் சற்று முன் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 317 புள்ளிகள் உயர்ந்து 72374 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 116 புள்ளிகள் உயர்ந்து 22027 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச் சந்தை கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்றைய பங்குச் சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், பேங்க் பீஸ், சிப்லா, கோல்ட் பீஸ், ஐடி பீஸ், கரூர் வைசியா வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் கல்யாண் ஜூவல்லர்ஸ், மணப்புரம் கோல்டு ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்