பங்குச்சந்தை இன்று ஏற்றமா? சரிவா? சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!
புதன், 8 நவம்பர் 2023 (11:27 IST)
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதையும் நேற்று பங்குச்சந்தை ஓரளவு உயர்ந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இன்று பங்கு சந்தை பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இன்றி வர்த்தகமாகி வருகிறது.
இன்று காலை 9 மணிக்கு பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய போது ஏற்றத்தில் இருந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தற்போது சிறிய அளவில் சரிந்து உள்ளது.
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 64 ஆயிரத்து 918 என்ற புள்ளிகளிலும் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 19,423 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
பங்குச்சந்தையின் வர்த்தகம் இன்று ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் புதிதாக முதலீடு செய்பவர்கள் தகுந்த ஆலோசனை பெற்று முதலீடு செய்யலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.