மீண்டும் உயர்ந்தது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

வியாழன், 2 நவம்பர் 2023 (11:40 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிவில் இருந்த நிலையில் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டமடைந்தனர். இந்த நிலையில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் பங்குச்சந்தை சரிவில் இருந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் இன்று 385 புள்ளிகள் உயர்ந்து 63 ஆயிரத்து 980 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 120 புள்ளிகள் உயர்ந்து 19,110 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.  நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்செக்ஸ் சுமார் 350 புள்ளிகள் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இனிவரும் நாட்களிலும் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக பங்கு சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்