வீட்ல பெண்ணுக்கு மரியாதை இல்ல!.. மகளிர் தின கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் விஜய்?..

Mahendran

வெள்ளி, 6 மார்ச் 2026 (21:04 IST)
தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் உருவாகி வருகிறது. அதே நேரம் இந்த கட்சியின் மீது பல விமர்சனங்களும் இருக்கிறது.. இந்த கட்சியில் விஜயை தவிர தெரிந்த முகம் யாரும் இல்லை.. செங்கோட்டையன் மட்டுமே இருக்கிறார். விஜய் எழுதிக் கொடுத்ததை அப்படியே பேசுகிறார்..

சினிமாவில் கேமரா முன் நடிப்பது போலவே பொதுக்கூட்டங்களிலும் ஆவேசமாக பேசுகிறார்.. எந்த அரசியல் கொள்கையோ, அரசியல் அனுபவமோ விஜய்க்கு இல்லை.. திமுகவை திட்டுவதை மட்டுமே தனது வேலையாக வைத்திருக்கிறார்..அதிமுக, பாஜக, நாம் தமிழர், காங்கிரஸ் போன்ற கட்சிகளைப் பற்றி விமர்சிப்பதில்லை என்றெல்லாம் அவர் மீது விமர்சனம் இருக்கிறது.

ஆனால் விஜய் அதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்வதில்லை.. அதோடு அவரின் மனைவி சங்கீதா சமீபத்தில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்தார். மேலும் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருக்கிறது என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.அந்த நிலையில்தான் விஜய் நேற்று சென்னையில் நடந்த ஒரு திருமண விழாவில் நடிகை திரிஷாவோடு கலந்து கொண்டார்.. இது விஜயின் மீது பலருக்கும் இருந்த நம்பிக்கையை சிதைத்திருக்கிறது..

இந்நிலையில்தான், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை மாமல்லபுரம் ஃபோய் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டான் ஹோட்டலில் மகளிர் தின விழா நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் விஜய் மகளிருக்கான சில திட்டங்கள் குறித்தும் அறிவிக்கவுள்ளாராம்.

விஜய் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மகள் சென்னையில் ஒரு ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிரார். விஜய் என்னை கொடுமைப்பத்தினார்.. சைக்கோ போல நடந்துகொண்டார் என சங்கீதா விஜயின் மீது புகார்களை கூறியிருக்கும் நிலையில் மகளிரை போற்றுவது போல விஜய் நாளை பேசவிருக்கிறார் என்பது பெரிய முரண்பாடாக பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்