இரண்டு நாள் ஏற்றத்திற்கு பின் இன்று திடீரென சரிந்த பங்குச்சந்தை: நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

செவ்வாய், 7 நவம்பர் 2023 (11:00 IST)
பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக  ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் இன்று திடீர் என பங்குச்சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கியது முதலே பங்குச்சந்தை சரிவில் உள்ளது. சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 125 புள்ளிகள் சரிந்து 64 ஆயிரத்து 820 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 25 புள்ளிகள் சார்ந்து 19,385 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது  இன்று சில புள்ளிகள் மட்டுமே சென்செக்ஸ், நிப்டி  சரிந்துள்ளதால் பெரிய அளவில் முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
மேலும் பங்கு சந்தை அடுத்த சில நாட்களில் மீண்டும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்