தொடர் சரிவில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

புதன், 1 நவம்பர் 2023 (11:22 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிந்து கொண்டே வருகிறது என்பதும் இதனால் முதலீட்டாளர்களுக்கு இலட்சக்கணக்கில் கோடி கணக்கில் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் நேற்று பங்கு சந்தை சரிந்த நிலையில் இன்று மீண்டும் சரிந்து உள்ளது. சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 135 புள்ளிகள் குறைந்து 63 ஆயிரத்து 740 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 37 புள்ளிகள் பிறந்து 19,42 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்த வாரம் முழுவதுமே பங்குச்சந்தை சரிவாக தான் காணப்படும் என்பதால் புதிதாக முதலீடு செய்பவர்கள் மிகுந்த கவனத்துடன் முதலீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் நீண்ட கால அடிப்படையில் பங்குச்சந்தை உயரும் என்பதால் தகுந்த ஆலோசகரை கலந்து கொண்டு அதன் பின் பங்குச்சந்தையில் முதலீடு செய்யு அறிவுறுத்தப்படுகிறது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்