2வது நாளாக பங்குச்சந்தை ஏற்றம்.. 82,000ஐ தாண்டிய சென்செக்ஸ்..!

Siva
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (09:29 IST)
பங்குச்சந்தை நேற்று திடீரென உயர்ந்த நிலையில், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில், இன்றும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளதால், முதலீட்டாளர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பிரச்சினை காரணமாக, பங்குச்சந்தை மோசமாக சரிந்த நிலையில் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அதன்பின் படிப்படியாக பங்குச்சந்தை உயர்ந்தது. நேற்று சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்ததோடு, இன்றும் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சற்றுமுன் நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 210 புள்ளிகள் உயர்ந்து 82,118 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 55 புள்ளிகள் உயர்ந்து 25,183 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்.சி.எல் டெக்னாலஜி, ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ் ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்துஸ்தான் யுனிலிவர், இண்டஸ் இண்ட் வங்கி, கோடக் வங்கி, மாருதி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்