மறுபடியும் சரிந்த சென்செக்ஸ்.. இன்றைய பங்குச்சந்தை நிலவரம்..!

Siva

வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (11:18 IST)
இந்த வாரம் பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்த நிலையில் நேற்று மட்டும் ஓரளவுக்கு உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்த நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் இன்று காலை தொடங்கியது முதலே சரிந்த நிலையில் சற்றுமுன் சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்து 79 ஆயிரத்து 270 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 96 புள்ளிகள் குறைந்து 24, 230 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் புதிய முதலீட்டாளர்கள் இப்போதைக்கு பங்குச்சந்தைக்கு வர வேண்டாம் என்றும் ஏற்கனவே முதலீடு செய்தவர்கள் தங்களுடைய முதலீடு எந்த அளவில் உள்ளது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 
 
இன்றைய பங்குச் சந்தையில் பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, இந்துஸ்தானி லீவர், ஐடிசி, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்சிஎல் டெக்னாலஜி, ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்