திடீரென படு பாதாளத்திற்கு சென்ற பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 2200 புள்ளிகள் சரிவு..!

Siva

திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (11:11 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று திடீரென பங்குச்சந்தை படுமோசமாக சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் 1500 புள்ளிகளுக்கும் மேல் சரிந்த நிலையில் சற்றுமுன் 2200 புள்ளிகள் சார்ந்து 78 ஆயிரத்து 800 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 662 புள்ளிகள் சார்ந்து 24,042  என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. வாரத்தின் முதல் நாளே 2000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் அறிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் இன்று மட்டும் லட்சக்கணக்கான கோடிகள் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் பங்குச்சந்தை மீண்டும் எழுச்சி பெரும் என்றும் எனவே நீண்ட கால முதலீட்டாளர்கள் கவலை அடைய தேவையில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. இன்றைய பங்குச்சந்தையில் ஹிந்துஸ்தான் லீவர், நெஸ்ட்லே இந்தியா, சன் பார்மா உள்ளிட்ட ஒரு சில பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளதாகவும் கிட்டத்தட்ட அனைத்து பங்குகளும் மோசமாக சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.


Edited by Siva

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்