பட்ஜெட்டிற்கு பின் 2வது நாளாக சரியும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva

புதன், 24 ஜூலை 2024 (10:02 IST)
பொதுவாக பட்ஜெட் தினத்தில் பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தபோதிலும் பங்குச்சந்தை குறைந்தது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் பட்ஜெட்டுக்கு மறுநாள் ஆன இன்றும் பங்குச்சந்தை சரிவில் தான் வர்த்தகம் தொடங்கி இருக்கிறது.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 72 புள்ளிகள் சரிந்து 80 ஆயிரத்து 360 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை நிப்டி 19 புள்ளிகள் சார்ந்து 24 ஆயிரத்து 460 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது

இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்.சி.எல் டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட பங்குகள் சரிந்து உள்ளன. அதேபோல் ஆசியன் பெயிண்ட், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி,  ஐடிசி, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

பட்ஜெட்டுக்குப்பின் பெரிய அளவில் பங்குச்சந்தை சரியவில்லை என்றாலும் இன்னும் ஒரு சில நாட்களில் பங்குச்சந்தை உயரும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்