பங்குச்சந்தை மீண்டும் உச்சம்.. இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

Siva

புதன், 12 ஜூன் 2024 (11:38 IST)
தேர்தல் முடிவுக்கு பின்னர் பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
மும்பை பங்குச்சந்தை இன்று சுமார் 400 புள்ளிகள் உயர்ந்து 76 ஆயிரத்து 855 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்கு சந்தை 125 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 390 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
தேர்தலுக்கு பின் பங்குச்சந்தை உயரும் என்று பங்கு சந்தை நிபுணர்கள் கூறியது போலவே தற்போது பங்குச் சந்தை உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளன. ஆசியன் பெயிண்ட், ஹிந்துஸ்தான் லீவர், இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்