மீண்டும் உயர்ந்தது பங்குச்சந்தை.. வாரத்தின் கடைசி நாளில் சென்செக்ஸ் நிலவரம்..!

வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (11:01 IST)
பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக திடீரென சரிந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சற்று முன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 200 புள்ளிகள் அதிகரித்து 65 ஆயிரத்து 38 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
 அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 80 புள்ளிகள் அதிகரித்து 19,333 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
வாரத்தின் கடைசி நாளில் பங்கு சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 
மேலும் இன்று பெல், டாட்டா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள்  உயர்ந்துள்ளதாகவும் எச்.டி.எப்.சி வங்கியின் பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்