இந்த வாரத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக பங்குச்சந்தை உயர்ந்துள்ளது, முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலையில் சில மணி நேரம் சரிவை சந்தித்தாலும், அதன் பிறகு வர்த்தகம் உயர்ந்தது. இன்றும் அதேபோன்ற ஏற்றத்துடன் வர்த்தகம் நடைபெற்று வருவதால், முதலீட்டாளர்கள் கூடுதல் நம்பிக்கை அடைந்துள்ளனர்.
இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து 82,157 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 78 புள்ளிகள் உயர்ந்து 25,128 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.