மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 119 புள்ளிகள் சரிந்து 81,517 என்ற புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 44 புள்ளிகள் குறைந்து 24,934 என்ற புள்ளிகளிலும் வர்த்தகமானது. இந்த சரிவு முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இன்றைய வர்த்தகத்தில், அப்போலோ ஹாஸ்பிடல், பாரதி ஏர்டெல், ஹீரோ மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், இன்ஃபோசிஸ், மாருதி மற்றும் டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.
அதேசமயம், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், சிப்லா, HCL டெக்னாலஜி, HDFC வங்கி, ICICI வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஐடிசி, ஜியோ ஃபைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவில் வர்த்தகமாகின.