உலக பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, பங்குச்சந்தைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் அமெரிக்காவின் பொருளாதார கொள்கைகள் காரணமாக, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்தியாவில், இந்த சர்வதேச காரணிகளின் தாக்கம் காரணமாக ஒரு கிராம் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு ரூ. 10,000ஐத் தாண்டியுள்ளது. இந்த நிலையில் இன்றைய தங்கம் விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
இதேபோல், வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.138.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.138,000.00 ஆகவும் உள்ளது.