ரூ.4,008 விலை குறைந்தது தங்கம்: பழைய ஃபாமுக்கு திரும்பியதால் குஷி!
புதன், 26 ஆகஸ்ட் 2020 (12:02 IST)
கடந்த சில நாட்களாக ஏற்றமும் இறக்கமுமாக இருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் கணிசமாக குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்புகளால் பலர் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்ய தொடங்கியதால் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது. கடந்த சில நாட்களாக ஏற்றமும் இறக்கமுமாக இருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் கணிசமாக குறைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து இன்று சவரனுக்கு 232 ரூபாய் குறைந்து 39,352 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதாவது ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று 29 ரூபாய் குறைந்து 4919 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கடந்த 19 நாட்களில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.4,008 வரை குறைந்துள்ளது. அதேபோல வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.69.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.