கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்க விலை, இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் ஒரு கிராம் ரூ.9,025-க்கு விற்கப்பட்டது. ஆனால் மாலை வர்த்தக முடிவில், அதே கிராம் தங்கம் ரூ.9,100-க்கு உயர்ந்தது.
அதேபோல், ஒரு சவரன் தங்கம் காலை ரூ.72,200-க்கு விற்கப்பட்ட நிலையில், மாலையில் அது ரூ.72,800 ஆக உயர்ந்தது. நேற்று இதே தங்கம் ஒரு கிராம் ரூ.8,900, சவரன் ரூ.71,200 ஆக இருந்தது. இதன் அடிப்படையில், இன்று மட்டும் சவரன் விலை ரூ.2,600 வரை உயர்ந்துள்ளது.
இவ்வளவு பெரிய மாற்றத்திற்கு முக்கிய காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வும், இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்ற சூழ்நிலையும் குறிப்பிடப்படுகின்றன.