செவ்வாய், 18 மே 2010 (15:41 IST)
காதலும், காதலர்களும் செய்யும் நகைச்சுவை கலாட்டாக்கள்..
எங்கப் போனாலும்
நான் செத்துட்டா நீ என்னப் பண்ணுவ?
நீங்க செத்த பிறகு எனக்கு என்னங்க வாழ்க்கை.. நானும் செத்துப் போய்டுவேன்.
சரிதான்.. ஜோசியர் சொன்னது சரியாத்தான் இருக்கு.
என்னங்க சொன்னாரு?
நீ செத்தாலும் சனி உன்ன விடாதுன்னு.
திருமண நாள்
நண்பர் ஒருவரிடம் தனது 50வது திருமண நாள் குறித்து ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்.
நண்பர் கேட்டார்... 25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?
என் மனைவியை அந்தமான் தீவிற்கு அழைத்துப் போனேன்.
வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?
அவளைத் திரும்ப அழைத்து வருவது பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
கஞ்சக் காதலன்
காதலன்: நீலக் கடல் எவ்வளவு அழகா இருக்கு பார்த்தியா கண்ணே...
காதலி : தினமும் இந்த நீலக்கடலத்தானேக் காண்பிச்சிக்கிட்டு இருக்கீங்க.. ஒரு நாளைக்காவது நிலக்கடலையை காட்டக்கூடாதா... கண்ணாளா!
காவல்நிலையம்
சார், என்னோட பொண்ணைக் காலையில் இருந்து காணல! புகார் கொடுக்கணும்..
அதோ போறாரே.. அவர்தான் உங்க சம்பந்தியா இருக்கணும்.. முதல்ல அவர்கிட்ட போய் பேசுங்க...
என்ன சார் நீங்க.. பொண்ணக் காணலைன்னு சொல்றேன்.. நீங்க என்னடான்னா அவர் கிட்ட பேசச் சொல்றீங்க?
அவரோட பையனக் காணோம்னு இப்போத்தான் புகார் கொடுத்துட்டு போறாரு.. அதான்.