காணாமல் போன தேமுதிக வேட்பாளர் சுதீஷ்: கள்ளக்குறிச்சியில் திமுக!
வியாழன், 23 மே 2019 (09:23 IST)
கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் முன்னிலை உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுதீஷ் பின்னடைவை சந்தித்துள்ளார்.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதில் பாஜக கூட்டணி 282 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 107 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி மக்களவை தேர்தலிலும் இடைத்தேர்தலிலும் முன்னிலை வகித்து வருகிறது. கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி முன்னிலை வகிக்கிறார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக நட்சத்திர வேட்பாளர் எல்கே சுதீஷ் பின்னடைவை சந்தித்து உள்ளார். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது திமுகவின் வெற்றி தற்போதைய சூழ்நிலையில் பிரகாசமாக உள்ளது.