மோடி முதல்வரா? பிரதமரா? பிரச்சாரத்தில் கன்ஃபியூசான கஞ்சா கருப்பு

புதன், 3 ஏப்ரல் 2019 (09:06 IST)
பிரச்சாரத்தில் கஞ்சா கருப்பு உளறியதால் சலசலப்பு ஏற்பட்டது.
 
தேர்தல் நெருங்குவதால் அமைச்சர்கள் கட்சி பிரமுகர்கள் என அனைவரும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல்காந்திக்கு பதிலாக ராஜீவ் காந்தி என்றும், மாம்பழம் சின்னத்திற்கு பதிலாக ஆப்பிள் சின்னம் என்றும் வேட்பாளர்களின் பெயரை மாற்றி கூறியும் அலப்பறை செய்து வருகின்றனர் அதிமுகவினர். இதேபோல் திமுகவினரும் பல உலறல் பேச்சை நடத்தி வருகின்றனர்.
 
தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் கஞ்சா கருப்பு. பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் புகழ் பெற்றார். சமீபத்தில் நடிகர் கஞ்சா கருப்பு அ.தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டார்.
 
இந்நிலையில் திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து அவர் பழனியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது முதல்வர் மோடி சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என கூறினார். உடனடியாக சுதாரித்திக்கொண்டு பிரதமர் மோடி என கூறினார். இதனால் சற்று நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்