கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்திற்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், கச்சத்தீவு விவகாரத்தில் ஆர்டிஐ பொய் சொல்கிறது என சொல்பவர்கள் விவாதம் செய்ய தயாரா என கேள்வி எழுப்பினார்.
இத்தனை ஆண்டுகளாக சுப்பிரமணியன் சாமி போன்றவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என கேள்வி எழுப்பிய அண்ணாமலை 50 ஆண்டுகளுக்குப் பிறகு இதை வெளியே கொண்டு வந்துள்ளதாகவும் இவ்வளவு காலம் அவர்கள் ஏன் ஆர்டிஐ போடவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார். சீமானுக்கு சின்னமும் இல்லை ஓட்டும் இல்லை என்று அண்ணாமலை விமர்சித்தார்.