வறண்ட ராமநாதபுரத்தை பசுமையாக மாற்றுவேன்: ஓபிஎஸ் தீவிர பிரச்சாரம்

Siva

திங்கள், 1 ஏப்ரல் 2024 (15:46 IST)
வறண்ட ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றுவேன் என்று ராமநாதபுரம் மாவட்ட சுயேட்சை வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

மக்களவை தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.  அந்த வகையில் ராமநாதபுரம் தொகுதியை பாஜக கூட்டணியில் பெற்றுள்ள ஓ பன்னீர்செல்வம் அவரே அங்கு போட்டியிடும் நிலையில் அவர் எதிர்த்து அவரது பெயரிலேயே 5 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய ஓ பன்னீர்செல்வம் என்னை எதிர்த்து ஏராளமான பன்னீர்செல்வங்கள் இங்கு போட்டியிடுகிறார்கள், எத்தனை பன்னீர்செல்வங்கள் எனக்கு எதிராக போட்டியிட்டாலும், அம்மாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட, உங்கள் மனதில் உள்ள இந்த பன்னீர்செல்வத்தை வீழ்த்த யாராலும் முடியாது என்று கூறினார்

மேலும் நான் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் வறண்ட ராமநாதபுரத்தை பசுமை மாவட்டமாக மாற்றுவேன் என்றும் இந்த தொகுதியில் தங்கியிருந்து இந்த தொகுதி மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவேன் என்றும் தெரிவித்துள்ளார்

தேனி தொகுதியில் நான் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அந்த மாவட்டத்திற்கு தேவையான மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளை கொண்டு வந்தேன் என்றும் அதேபோல் இங்கும் கொண்டு வருவேன் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.

ALSO READ: 3 முறை வெற்றி பெற்ற மத்திய சென்னை தொகுதி.. தயாநிதி மாறனுக்கு மீண்டும் வெற்றி கிடைக்குமா?

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்