தமிழகத்தில் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 51.41% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் முதற்கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்றாத அதை கண்டித்து ஒரு சில கிராமங்களில் தேர்தலைப் புறக்கணித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் காலை முதலே வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 51.41% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 57.86% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையின் மூன்று தொகுதிகளிலுமே சுணக்கம் நீடிக்கிறது. தொகுதி வாரியான வாக்குப்பதிவு - பிற்பகல் 3 மணி நிலவரம்: