தமிழகத்தில் வாக்குப்பதிவு மந்தம்..! 3 மணி நிலவரப்படி 51.41% வாக்குப்பதிவு..!!

Senthil Velan

வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (16:33 IST)
தமிழகத்தில் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று வருகிறது.  பிற்பகல் 3 மணி நிலவரப்படி 51.41% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 
 
தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் முதற்கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்றாத அதை கண்டித்து ஒரு சில கிராமங்களில் தேர்தலைப் புறக்கணித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
தமிழகத்தில் காலை முதலே வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று வருகிறது.  பிற்பகல் 3 மணி நிலவரப்படி 51.41% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 
 
அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 57.86% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையின் மூன்று தொகுதிகளிலுமே சுணக்கம் நீடிக்கிறது. தொகுதி வாரியான வாக்குப்பதிவு - பிற்பகல் 3 மணி நிலவரம்:
 
தருமபுரி - 57.86%
 
நாமக்கல்- 57.67%
 
கள்ளக்குறிச்சி - 57.34%
 
ஆரணி - 56.73%
 
கரூர்- 56.65%
 
பெரம்பலூர் - 56.34%
 
சேலம்- 55.53%
 
சிதம்பரம் - 55.23%
 
விழுப்புரம்- 54.43%
 
ஈரோடு - 54.13%
 
அரக்கோணம் - 53.83%
 
திருவண்ணாமலை - 53.72%
 
விருதுநகர் - 53.45%
 
திண்டுக்கல் -53.43%
 
கிருஷ்ணகிரி - 53.37%
 
வேலூர் - 53.17%
 
பொள்ளாச்சி -53.14%
 
நாகப்பட்டினம் - 52.72%
 
தேனி - 52.52%
 
நீலகிரி - 52.49%
 
கடலூர் - 52.13%
 
தஞ்சாவூர்- 52.02%
 
மயிலாடுதுறை - 52.00%
 
சிவகங்கை - 51.79%
 
தென்காசி - 51.45%
 
ராமநாதபுரம் -51.16%
 
கன்னியாகுமரி - 51.12%
 
திருப்பூர் - 51.07%
 
திருச்சி - 50.71%
 
தூத்துக்குடி - 50.41%
 
கோவை - 50.33%
 
காஞ்சிபுரம் - 49.94%
 
திருவள்ளூர் - 49.82%
 
திருநெல்வேலி - 48.58%
 
மதுரை - 47.38%
 
ஸ்ரீபெரும்புதூர் - 45.96%
 
தென் சென்னை - 44.84%
 
வட சென்னை - 42.10%
 
மத்திய சென்னை - 41.47%

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்