யானைக்கு பிடிக்கும் பழம்.! வேட்பாளருக்கு சின்னமாக ஒதுக்கீடு.! என்ன பழம்.. யார் வேட்பாளர்...!

Senthil Velan

சனி, 30 மார்ச் 2024 (17:34 IST)
வேலூர் தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகானுக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள்  புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 
 
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என பலர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

ALSO READ: மக்களிடையே பற்றி எரியுமா..? மதிமுகவுக்கு இந்த சின்னம் ஒதுக்கீடு.!
 
இந்நிலையில், வேலூர் தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகானுக்கு பலாப்பழம்  சின்னம்  ஒதுக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்