தேர்தலன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை..! தமிழக தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை..!!

Senthil Velan

திங்கள், 15 ஏப்ரல் 2024 (13:54 IST)
வாக்குப்பதிவு அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை ஆணையர் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு எச்சரித்துள்ளார்.
 
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் நாளன்று தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்  வாக்குப்பதிவு அன்று காட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும்  என்றும் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலதுறை ஆணையர் வாயிலாக நடவடிக்கை எடுக்கபடும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  தெரிவித்துள்ளார்.
 
தபால் வாக்கு நாளையுடன் நிறைவடைகிறது அவர் கூறியுள்ளார். ஏப்ரல் 1   தேதி முதல் 13 ம் தேதி வரை தமிழகத்தில் 460 போடி மதிப்பிலான ரொக்கம், மதுபானங்கள், நகை மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 293 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாகு  குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: விளம்பரங்களுக்கு அனுமதி மறுப்பு..! திமுக வழக்கில் தேர்தல் தேர்தல் ஆணையத்துக்கு அதிரடி உத்தரவு...!!
 
53 கோடி அளவுக்கு ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் 5 லட்சம் லிட்டர் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்