சரிந்து வரும் செல்வாக்கு.... கரூரில் யாருக்கு வெற்றி? விரிவான அலசல்!!!!

Webdunia
சனி, 13 ஏப்ரல் 2019 (14:34 IST)
மக்களவை தொகுதியில் கரூர் நிலவரம் குறித்து ஓர் விரிவான அலசல் உங்கள் பார்வைக்காக... 
 
தமிழக அளவில் மைய மாவட்டம் என்றாலே கரூர் மாவட்டம் தான் என்றாலும், மக்களவை தொகுதியில் கரூர் மக்களவை தொகுதியானது., கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் தொகுதியும், புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை தொகுதியும், திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை தொகுதி என்று 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது கரூர் மக்களவை தொகுதி ஆகும். 
இந்நிலையில், ஆரம்பம் முதலே, கடந்த 10 வருடங்களாக மக்களவை உறுப்பினர் அ.தி.மு.க வினை சார்ந்த தம்பித்துரை ஒரு புறம் இருக்க, மக்களவை துணை சபாநாயகர் பதவி என்று பல்வேறு விமர்சனங்கள் வந்த நிலையில், அவரது பிரச்சார யுத்தியில், ஏற்கனவே காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவி வகித்து வந்த ஜோதிமணியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர்கள், கரூரில் தான் ஜோதிமணி அக்காவிற்கு வாய்ப்பு என்று முடிவெடுத்து, தம்பித்துரையை குறிவைத்து அவரது ஒவ்வொரு செயலையும் கண்காணிக்க வைத்து அதையே, அவருக்கு எதிராக திருப்பியது., பின்னர் மதசார்பற்ற கூட்டணியில் தி.மு.க வே காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுத்தது, பின்னர் காங்கிரஸ் கட்சியே அறிவிக்காத நிலையில் தான் தான் வேட்பாளர் என்று பேஸ்புக், டுவிட்டர்கள் மூலம் ஜோதிமணியின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே கிளப்பி விட, காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டு சிறு வயதிலேயே ஜோதிமணிக்கு எம்.பி ஆசையா ? என்று ஏற்கனவே முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க்.சுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி பூசலை ஏற்படுத்தியது. 
இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அறிவித்ததில் இருந்து காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மற்றும் தி.மு.க கூட்டணியின் முக்கிய மற்றும் மூத்த நிர்வாகிகளை சந்திக்காமல் அவரே தனியாக செயல்பட்டு வந்த நிலையில், அவருடைய மைனஸ் பாய்ண்ட் என்னவென்றால் அவரே முடிவெடுப்பது, அவரே தன்னிச்சையாக செயல்படுவது நான் தான் எல்லாம் என்று செயல்படுவது தான். 
ஆனால், எதிரே நிற்கும், அ.தி.மு.க வேட்பாளரும், சிட்டிங் எம்.பி யுமான தம்பித்துரைக்கு (வயது 70)., இந்நிலையில் தள்ளாத வயதிலும், அ.தி.மு.க வேட்பாளர் கொளுத்தும் வெயிலிலும் திறந்த வெளி ஜீப்பிலும், மக்களிடையே நேரில் சந்தித்து வாக்குகள் கேட்டு வருகின்றார். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியோ கொளுத்தும் வெயிலில் நிழலில் வாக்குகள் சேகரித்தும், வருகின்றார். 
ஆனால், சின்னஞ்சிறு குழந்தைகளை பார்த்து வாக்குகள் சேகரிப்பது போலவும், ஆங்காங்கே சில செட்டப்புகள் செய்யப்பட்டு, அதே பாணியில் பேஸ்புக் மற்றும் டுவிட்டர்களில் வாக்குகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், 10 ஆண்டுகளாக தம்பித்துரை என்ன செய்தார் இந்த கரூர் தொகுதிக்கு என்று கேள்விகள் கேட்ட இதே காங்கிரஸ் வேட்பாளரிடம் அவராவது தேர்தலுக்கு முன்னரே வாரம், வாரம் மக்களை சந்தித்தார் என்றும், இத்தனை நாளாக நீங்கள் எங்கம்மா இருந்தீங்க என்று ஒரு புறம் இந்த ஜோதிமணியை கலாய்க்க, ஜோதிமணியோ வேட்பாளர் ஆவதற்கு முன்னரே கரூருக்கு வருடத்திற்கே இரு முறை தான் கரூர் வருவாராம்.
இந்த கூத்தும், கரூர் பாராளுமன்ற தொகுதியில் வாக்குகள் சேகரிக்கும் போது ஜோதிமணியை பார்த்து மக்கள் கூறியதாம்., தற்போது ஜோதிமணி தான் வெற்றிக்கனியை பறிக்க உள்ளது என்று ஒரு விதமான மாயையை ஏற்படுத்திய தி.மு.க கூட்டணிக்கு தற்போது அதே கூட்டணியில் தற்போது தி.மு.க கட்சியில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி,க்கு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் சீட்டு வழங்கப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளர்கள் தற்போது ஜோதிமணிக்கு வாக்குகள் சேகரிக்காமல் உதயசூரியன் சின்னத்திற்கு தற்போதே வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
ஏற்கனவே ஜோதிமணி தான் மத்திய அமைச்சர், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாட்டின் இதய துடிப்பு என்று பேஸ்புக் மற்றும் டுவிட்டர்களில் கலாய்த்து வந்த அவரது தகவல் தொழில்நுட்ப பிரிவுகள், தற்போது ஆளே இல்லாத டீ கடைக்கு யாருக்கு டீ ஆத்துவது எப்படி தெரியாமல் முழித்து வருகின்றனர். வயதாக இருந்தாலும் கரூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தம்பித்துரை எங்க ஊர் மாப்பிள்ளை என்று ஆங்காங்கே தம்பித்துரைக்கு வரவேற்பு கொடுத்து வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது தான் கட்சியில் இணைந்த நிலையில், அவருக்கு சீட்டா என்ற கோணத்தில், உண்மையான தி.மு.க கட்சியினர் விரக்தியில் ஒரு பக்கம் உள்ளது அ.தி.மு.க விற்கு ஒரு பிளஸ் பாய்ண்ட் ஆகும் என்பதினால் தற்போது ஏறுமுகத்தில் தம்பித்துரை முதலிடம் நோக்கி நகர்ந்து வருகின்றார். பாதிவழியிலேயே காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை தத்தளித்து வருவதாகவும், அவருக்கு கை கொடுக்க ராகுல் ஏதாவது மாஸ்டர் பிளான் போடுவாரா என்பது தான் ஜோதிமணியின் ஆதரவாளர்களின் எதிர்ப்பார்ப்பு


- C. ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்