முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நளினி, முருகன் மற்றும் பேரறிவாளன் உள்பட 7 பேர் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். முருகன், நளினி , பேரறிவாளன் உள்பட ராஜீவ் காந்தி கொலையாளிகள் ஏழு பேர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தது.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, 7 பேர் விடுதலை என்பது எக்காலத்திலும் நடக்காது. அது தேர்தல் அறிக்கையில் உள்ளதே என கேட்கப்பட்ட கேள்விக்கு, அந்த அறிக்கையை போய் குப்பையில் போடுங்கள், 7 பேர் விடுதலை என்பது நாங்கள் இருக்கும் வரை நடக்காது என திட்டவட்டமாக பேசினார்.