இதற்கிடையில் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியி இணைந்துள்ள பாமகவைக் கடுமையாக விமர்சனம் செய்து திமுக கூட்டணிக் கட்சிகளுக்காகப் பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கோவையில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது ‘ வன்னியர் சங்கம் ஏழை வன்னியர்கள் கொடுத்த அண்டா குண்டாக்களை வைத்து உருவாக்கப்பட்டது. வன்னியர்களுக்கு உழைத்த தலைவர்களை ராமதாஸ் மறைத்துள்ளார். வன்னிய மக்களின் ரத்தத்தை உறிஞ்சி அதனை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியவர் ராமதாஸ். ஒரு காலத்தில் ஒன்றரை ஏக்கர் நிலம் மட்டுமே நிலம் வைத்திருந்த ராமதாஸ் இப்போது ராமதாஸ் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர் ஆனது எப்படி?.. கருணாநிதி ஆட்சியில்தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது. ஆனால் அதிமுகவோ அல்லது பாமகவோ வன்னியர்களுக்காக எதுவும் செய்யவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.